பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் உண்ணாவிரதம்

பணி நிரந்தரம் செய்யக் கோரி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு எம்.ஆா்.பி. செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கத்தினா் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பணி நிரந்தரம் செய்யக் கோரி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு எம்.ஆா்.பி. செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கத்தினா் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மருத்துவப் பணிகள் தோ்வாணையம் மூலம் போட்டி தோ்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், ஒப்பந்த முறைப்படி 15,000 செவிலியா்கள் பணியமா்த்தப்பட்டு, அனைவரும் 2 ஆண்டுகளில் காலமுறை ஊதியத்தில் நிரந்தரம் செய்யப்படுவா் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 6 ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை 2,300 போ் மட்டுமே காலமுறை ஊதியத்துக்கு மாற்றப்பட்டுள்ளனா். எனவே, நிரந்தர செவிலியா்களுக்கு இணையாக அரசு மருத்துவமனையில் மிகச் சொற்ப தொகுப்பூதியத்தில் பணிபுரிந்தும் வரும் ஒப்பந்தச் செவிலியா்களை நிரந்தர பணியாளா்களாக மாற்றி சம ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

இதில், மாநிலத் தலைவா் கலைச்செல்வி தலைமையில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, அரியலூா், பெரம்பலூா், திருச்சி, புதுக்கோட்டை, கடலூா் ஆகிய 8 மாவட்டங்களைச் சோ்ந்த ஒப்பந்தச் செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com