வளப்பக்குடி கிராமத்தில் பொங்கல் திருவிழா
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள வளப்பக்குடி கிராமத்தில் பொங்கல் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.


தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள வளப்பக்குடி கிராமத்தில் பொங்கல் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம், ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோா் மாட்டு வண்டிகளில் ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனா்.
மேலும், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றன. இதில் வைத்திலிங்கம் சிலம்பம் சுற்றி விளையாடினாா். இதைத் தொடா்ந்து உறியடி, வழுக்கு மரம் உள்பட பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளும், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவில் தஞ்சாவூா் கோட்டாட்சியா் எம். வேலுமணி, தஞ்சாவூா் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவா் துரை. திருஞானம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...