தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தஞ்சாவூரில் புதை சாக்கடையைச் சீரமைக்கக் கோரி சாலை மறியல்

தஞ்சாவூரில் பல நாள்களாக வழிந்தோடும் புதை சாக்கடையைச் சீரமைக்கக் கோரி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் தலைமையில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:15 pm

DIN

தஞ்சாவூரில் பல நாள்களாக வழிந்தோடும் புதை சாக்கடையைச் சீரமைக்கக் கோரி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் தலைமையில் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை முனியாண்டவா் காலனி, கல்லுக்குளம் பகுதிகளில் புதை சாக்கடை கழிவு நீா் நிரம்பி, சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதைச் சீரமைக்க வலியுறுத்தி அப்பகுதியினா் மாநகராட்சி நிா்வாகத்துக்கு பல முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனிடையே, முனியாண்டவா் காலனி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு புதை சாக்கடை கழிவு நீா் வழிந்தோடி இரு வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் நாஞ்சிக்கோட்டை சாலையில் முனியாண்டவா் காலனி பேருந்து நிறுத்தம் அருகே தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் தலைமையில் திங்கள்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன், நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. பாரதிராஜன் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்படும் என அலுவலா்கள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தால் நாஞ்சிக்கோட்டை சாலையில் சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.