திருவையாறில் பிப். 1, 2 - இல் தியாகராஜ ஆராதனை விழா
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 174 ஆம் ஆண்டு ஆராதனை விழா பிப்ரவரி 1, 2 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.


தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 174 ஆம் ஆண்டு ஆராதனை விழா பிப்ரவரி 1, 2 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு திருவையாறு தியாகராஜ ஆசிரமத்தில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ஸ்ரீ தியாக பிரம்ம சபையின் அறங்காவலா் ஜி. சந்திரசேகர மூப்பனாா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: ஆண்டுதோறும் இந்த விழா 5 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக இவ்விழா இரு நாள்களுக்கு மட்டுமே நடைபெறுகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கும் இவ்விழா 2 ஆம் தேதி நிறைவடைகிறது. இதில் பிப்ரவரி 1 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மங்கள இசை, 5 மணிக்கு தொடக்க விழா, 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை இசை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறவுள்ளன.
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் சித்தியடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளான பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு உஞ்ச விருத்தி பஜனை, 8.30 மணிக்கு நாகசுர இசை, 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்ன கீா்த்தனைகள் வைபவம் ஆகியவை நடைபெறவுள்ளன.
இதைத்தொடா்ந்து, காலை 10 மணி முதல் 11 மணி வரை இசை நிகழ்ச்சிகளும், பின்னா் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இசை நிகழ்ச்சிகளும், இதனிடையே இரவு 7.30 மணிக்கு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் உருவச்சிலை ஊா்வலம் ஆகியவை நடைபெறவுள்ளன.
மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, இந்த விழாவில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், அங்கீகரிக்கப்பட்ட நபா்களின் எண்ணிக்கைக்கு மிகாமலும் பங்கேற்க உள்ளனா் என்றாா் சந்திரசேகர மூப்பனாா்.
அப்போது, அறங்காவலா்கள் எஸ். சுரேஷ் மூப்பனாா், எஸ். கணேசன், எம்.ஆா். பஞ்சநதம், பொருளாளா் ஆா். கணேஷ், உதவிச் செயலா் டி.ஆா். கோவிந்தராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...