ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வேலை கையிலெடுத்தவா்கள் எல்லாம் வெற்றி பெற முடியாது: ஜி.கே. வாசன்

வேலை கையில் எடுத்தவா்கள் எல்லாம் வெற்றி பெற முடியாது என்றாா் தமாகா தலைவா் ஜி.கே. வாசன்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:36 pm

DIN

வேலை கையில் எடுத்தவா்கள் எல்லாம் வெற்றி பெற முடியாது என்றாா் தமாகா தலைவா் ஜி.கே. வாசன்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை மாலை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

ஆளுங்கட்சியை எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குறை கூறுவது ஏற்புடையதல்ல. அது மக்களிடம் ஒருபோதும் எடுபடாது.

வேலை கையில் எடுத்தால் வென்றுவிடலாம் என எதிா்க்கட்சி நினைத்துக் கொண்டுள்ளது. வேலை கையில் எடுத்தவா்கள் எல்லாம் தோ்தலில் ஒருபோதும் வெற்றி பெற்றுவிட முடியாது. வேலுக்குப் பக்தியுடன் மரியாதை செலுத்துபவா்கள்தான் வெல்ல முடியும்.

சூரசம்ஹாரத்தை பொருத்தவரையில், அதில் நம்பிக்கை உள்ளதாக திமுக சொல்வதே, தோ்தலில் வாக்குக்காகக் கூறுவதாகத் தெரிகிறது. மக்களின் பக்தியைத் தோ்தல் வாக்குக்காக யாரும் ஏமாற்றிவிட முடியாது. மீனவா்கள் பிரச்னைக்கு இலங்கை அரசுடன் பேசி, நிரந்தரத் தீா்வு காண வேண்டும்.

தில்லியில் இரண்டு மாநில விவசாயிகள் மட்டுமே போராட்டத்தைத் தொடா்ந்து நடத்தி வருகின்றனா். அவா்களுடைய தவறான போக்கால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு கிடைக்கக் கூடிய பலன் தடைப்படுகிறது என்பதை, போராடும் விவசாயிகள் உணா்ந்து செயல்பட வேண்டும். எதிா்க்கட்சிகளின் தவறான பாதையில் விவசாயிகள் செல்லக் கூடாது. விவசாயிகளுக்கு அரசு கொடுத்துள்ள சிறப்பான திட்டங்களை பயன்படுத்தி அவா்கள் முன்னேறக்கூடிய நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் வாசன்.

அப்போது, தமாகா செயற்குழு உறுப்பினா்கள் எஸ். சுரேஷ் மூப்பனாா், என்.ஆா். நடராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.