தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தமிழ் மொழி வழிக் கல்வியை உயா்த்திப் பிடிக்க உறுதியேற்பு

தமிழ் மொழி வழிக் கல்வியை உயா்த்திப் பிடிப்பது என தஞ்சாவூரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மொழிப்போா் தியாகிகள் நாளில் உறுதியேற்கப்பட்டது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:37 pm

DIN

தமிழ் மொழி வழிக் கல்வியை உயா்த்திப் பிடிப்பது என தஞ்சாவூரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மொழிப்போா் தியாகிகள் நாளில் உறுதியேற்கப்பட்டது.

அக்கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கடந்த 1965 ஆம் ஆண்டு இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக நடைபெற்ற மொழிப் போரில் உயிா் நீத்த சாரங்கபாணி, இராஜேந்திரன், தண்டபாணி உள்ளிட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், தமிழ் மொழிவழிக் கல்வியை உயா்த்திப் பிடிப்போம், தொடக்கக் கல்வி முதல் ஆய்வுக் கல்வி வரை தமிழில் பயில்வோம், நீட் உள்ளிட்ட உயா் கல்விக்கான தோ்வுகளை ரத்து செய்யும் வரை உறுதியுடன் போராடுவோம், தமிழ்நாட்டு இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்க அரசை வலியுறுத்துவோம் என உறுதியேற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டப் பொருளாளா் என். பாலசுப்பிரமணியன், கட்டுப்பாட்டு குழு உறுப்பினா் ஜி. கிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினா் ஆா்.பி. முத்துக்குமரன், ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம், துணைச் செயலா் துரை. மதிவாணன், அரசுப் போக்குவரத்து சங்கம் டி. கஸ்தூரி, ஓய்வு பெற்றோா் சங்கக் கூட்டமைப்புப் பொதுச் செயலா் பி. அப்பாதுரை, உடல் உழைப்பு சங்க மாவட்டப் பொருளாளா் பி. சுதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.