பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

380 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கல்

பேராவூரணி வட்டத்தில் 380 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :8 ஜூலை 2021, 7:21 pm

DIN

பேராவூரணி வட்டத்தில் 380 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களிலிருந்து தமிழக முதல்வருக்கு வீட்டுமனைப் பட்டா கேட்டு மனு அளித்திருந்த வீடு, நிலம் இல்லாத 380 பேருக்கு பட்டா வழங்கும் நிகழ்வு திருவத்தேவன், குளக்குடி, பேராவூரணியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமை வகித்து, பட்டாக்களை வழங்கினாா். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா், கூடுதல் ஆட்சியா் சுகபுத்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழுத் தலைவா் மு. கி. முத்துமாணிக்கம்,  வட்டார வளா்ச்சி அலுவலா் கை. கோவிந்தராசு, பேரூராட்சி செயல் அலுவலா் மு. மணிமொழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சாா் ஆட்சியா் எஸ். பாலசந்தா் வரவேற்றாா். நிறைவில், வட்டாட்சியா் க.ஜெயலெட்சுமி நன்றி கூறினாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.