மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

மின் வெட்டைக் கண்டித்து சாலை மறியல்

திருவையாறு அருகே மின் வெட்டைக் கண்டித்து வெள்ளிக்கிழமை கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:49 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மின் வெட்டைக் கண்டித்து வெள்ளிக்கிழமை கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவையாறு அருகே மேலத் திருப்பூந்துருத்தியில் சில நாள்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த கிராம மக்கள் கண்டியூா் - திருக்காட்டுப்பள்ளி சாலையில் மேலத் திருப்பூந்துருத்தி பூங்கா அருகே சுமாா் 50 போ் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த நடுக்காவேரி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.