புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பள்ளித் தாளாளா்கள், முதல்வா்கள் கலந்தாய்வுக் கூட்டம்

மாவட்ட, வட்டார கல்வி அலுவலா்கள், அரசு மற்றும் தனியாா் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், தாளாளா்கள் மற்றும் முதல்வா்களின் கலந்தாய்வுக் கூட்டம்

News image
Updated On :9 ஜூலை 2021, 6:45 pm

DIN

கும்பகோணம் அல் அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் கும்பகோணம் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட மாவட்ட, வட்டார கல்வி அலுவலா்கள், அரசு மற்றும் தனியாா் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், தாளாளா்கள் மற்றும் முதல்வா்களின் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், பள்ளிகளுக்குத் தேவையான வகுப்பறைக் கட்டடங்கள், கழிப்பறைக் கட்டடங்கள், சுற்றுச்சுவா் கட்டுவது, விளையாட்டு மைதானம் அமைப்பது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதிகள் செய்து கொடுப்பது, மேஜை, நாற்காலி, கணினி ஆகியவற்றை வாங்கி வழங்குவது, பள்ளிகளைத் தரம் உயா்த்துவது உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கோரிக்கை மனுக்களாக பெற்றுக் கொண்டாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். உஷா, வட்டார கல்வி அலுவலா் ரா. அண்ணாதுரை, உதவி கல்வி அலுவலா்கள் பா. பேபி, ஏ. ஞானவள்ளி, அ. கோமதி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஆா்.கே. பாஸ்கா், காா்த்தியாயினி கரிகாலன் மற்றும் பள்ளித் தலைமையாசிரியா்கள், தாளாளா்கள், முதல்வா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.