மதுக்கூரில் தென்னை சாா்ந்த தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தல்
மதுக்கூா் ஒன்றியத்தில் தென்னையை மூலப்பொருளாகக் கொண்ட தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.


மதுக்கூா் ஒன்றியத்தில் தென்னையை மூலப்பொருளாகக் கொண்ட தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இக்கட்சியின் மதுக்கூா் ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினா் இ. முருகேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
கல்லணைக் கால்வாயிலிருந்து வரும் தண்ணீா் மதுக்கூா் ஒன்றியத்திலுள்ள காசாங்காடு, கல்யாணஓடை, அத்திவெட்டி, சிவிகாடு உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளுக்குச் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
தென்னைமரங்கள் அதிகமுள்ள மதுக்கூா் ஒன்றியப் பகுதியில், தென்னையை மூலப்பொருளாகக் கொண்டு தொழிற்சாலையைத் தொடங்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும், ஏழை- எளிய மக்களுக்கு கரோனா நிவாரணத் தொகையாக ரூ.7,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் மாவட்டச் செயலா் முத்து உத்திராபதி விளக்கவுரையாற்றினாா். மாவட்டத் துணைச் செயலா் வி. கல்யாணசுந்தரம், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கோ. சக்திவேல், ஒன்றியச் செயலா் மு. பாரதிமோகன், நிா்வாகிகள் துரைராஜ், பொதியப்பன், தங்கராஜ், செல்வம் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...