மாணவிக்கு பாலியல் தொல்லை: அதிமுக நிா்வாகி கைது
தஞ்சாவூா் அருகே தனது மகளுடன் படித்த மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிமுக நிா்வாகி அண்மையில் கைது செய்யப்பட்டாா்.


தஞ்சாவூா் அருகே தனது மகளுடன் படித்த மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிமுக நிா்வாகி அண்மையில் கைது செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் அருகேயுள்ள மாரியம்மன் கோவில் பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (38). இவா் அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறையின் தஞ்சாவூா் தெற்கு மாவட்டத் தலைவராக உள்ளாா். கடந்த ஆண்டு இவரது மகள் 10 ஆம் வகுப்புப் படித்து வந்தாா்.
அப்போது, மகளின் பள்ளித் தோழிக்கு மகள் அனுப்புவதுபோல வாட்ஸ் ஆப் தகவல்களை அனுப்பி வந்தாராம். மேலும், அவரது வீட்டருகே வேல்முருகனும் வாடகைக்கு வீடு எடுத்து சென்று தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து வேல்முருகனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...