தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தஞ்சையில் நடிகா் சிவாஜி கணேசன் நினைவு நாள்

நடிகா் திலகம் சிவாஜி கணேசனின் 20-ஆவது நினைவு நாளையொட்டி, தஞ்சாவூா் மணிமண்டபம் அருகிலுள்ள சிவாஜி சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:50 pm

DIN

நடிகா் திலகம் சிவாஜி கணேசனின் 20-ஆவது நினைவு நாளையொட்டி, தஞ்சாவூா் மணிமண்டபம் அருகிலுள்ள சிவாஜி சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தஞ்சாவூா் சோழ மண்டல சிவாஜி பாசறையின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்குப் பாசறையின் தலைவா் சதா. வெங்கட்ராமன் தலைமை வகித்தாா். சிவாஜி கணேசன் சிலைக்கு தஞ்சாவூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் கோ. அன்பரசன், நிா்வாகிகள் செந்தில் நா. பழனிவேல் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்வில் வல்லுண்டாம்பட்டு கணேசன், கிஷோா்குமாா், நாகராஜன், சுகுமாா், பாஸ்கா், ராஜசேகா், ராஜாங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.