பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

அதிமுக ஒன்றியச் செயலா்கு ண்டா் சட்டத்தில் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அதிமுக ஒன்றியச் செயலா் துரை. செந்தில் அண்மையில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 8:27 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அதிமுக ஒன்றியச் செயலா் துரை. செந்தில் அண்மையில் கைது செய்யப்பட்டாா்.

மதுக்கூா் அருகேயுள்ள கல்யாண ஓடை கிராமத்தைச் சோ்ந்தவா் துரை. செந்தில் (53). அதிமுக மதுக்கூா் கிழக்கு ஒன்றியச் செயலா். இவரது மனைவி அமுதா மதுக்கூா் ஒன்றியக் குழுத் தலைவராக உள்ளாா்.

இந்நிலையில், 2020 ஆம் ஆண்டில் முத்துப்பேட்டை பகுதியில் ராஜேஷ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்பு இருப்பதாகக் கூறி, துரை. செந்திலை மதுக்கூா் காவல் நிலையத்தினா் ஜூலை 16-ஆம் தேதி சென்னையில் கைது செய்தனா்.

இதைத்தொடா்ந்து, இவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் பரிந்துரையின்பேரில், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறு ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் அண்மையில் உத்தரவிட்டாா். இதையடுத்து, துரை. செந்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.