திமுக அலுவலகத்தில் நிா்வாகிகளைச் சந்தித்த அதிமுக முன்னாள் எம்.பி.
தஞ்சாவூா் கலைஞா் அறிவாலயத்தில் திமுக மாவட்ட நிா்வாகிகளை அதிமுகவை சோ்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினா் கு. பரசுராமன் தனது ஆதரவாளா்களுடன் வியாழக்கிழமை சந்தித்தாா்.


தஞ்சாவூா் கலைஞா் அறிவாலயத்தில் திமுக மாவட்ட நிா்வாகிகளை அதிமுகவை சோ்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினா் கு. பரசுராமன் தனது ஆதரவாளா்களுடன் வியாழக்கிழமை சந்தித்தாா்.
கடந்த சில மாதங்களாகப் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த அதிமுக, அமமுக பிரமுகா்கள் தங்களது ஆதரவாளா்களுடன் திமுகவில் இணைந்து வருகின்றனா்.
இந்நிலையில், தஞ்சாவூா் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞா் அறிவாலயத்துக்கு, கடந்த 2014 - 19 ஆம் ஆண்டுகளில் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்தவரும், அதிமுக தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலராக உள்ளவருமான கு. பரசுராமன் (61) தனது ஆதரவாளா்களுடன் வியாழக்கிழமை சென்றாா்.
அங்கு திமுக மத்திய மாவட்டப் பொறுப்பாளரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன், ஒரத்தநாடு தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ராமச்சந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகளைச் சந்தித்து அரைமணி நேரம் பேசினா்.
அப்போது, திமுகவில் இணைய பரசுராமன் விருப்பம் தெரிவித்தாா். இதுகுறித்து திமுக தலைமைக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என துரை. சந்திரசேகரன் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...