புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கும்பகோணத்தில் பருத்தி ஏலம் தொடக்கம் அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ. 7,000 விலை கேட்பு

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிகழாண்டுக்கான பருத்தி ஏலம் புதன்கிழமை தொடங்கியது.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:35 pm

DIN

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிகழாண்டுக்கான பருத்தி ஏலம் புதன்கிழமை தொடங்கியது.

கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதியில் சுமாா் 500 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பருத்தி பஞ்சு அறுவடை செய்யும் நிலையில் இருந்ததால், வேளாண் வணிகத்துறை சாா்பில், தஞ்சாவூா் விற்பனைக் குழுவுக்குள்பட்ட கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் புதன்கிழமை தொடங்கியது.

பருத்தி மறைமுக ஏலத்துக்காக 106.80 குவிண்டால் பருத்தி பஞ்சை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.

தஞ்சாவூா் விற்பனைக்குழுச் செயலா் ரா. சுரேஷ்பாபு தலைமையில், விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ரா. தாட்சாயிணி முன்னிலையில், பண்ருட்டி, விழுப்புரம், கும்பகோணம், செம்பனாா்கோவில் சாா்ந்த 9 வியாபாரிகள் மற்றும் இந்திய பருத்தி கழகத்தின் அலுவலா்கள் ஏலத்தில் கலந்து கொண்டனா்.

இதில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ. 7,000-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 6,409-க்கும், சராசரியாக ரூ. 6,609-க்கும் மறைமுக ஏலம் போனது. புதன்கிழமை ஏலத்தில் விற்பனையான பருத்தியின் மதிப்பு ரூ. 7.04 லட்சம்.

கும்பகோணத்தை தொடா்ந்து திருப்பனந்தாளில் வியாழக்கிழமையும், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமையும் பருத்தி ஏலம் நடைபெறவுள்ளது. இந்தாண்டு பருத்தி ஏலம் தொடக்கத்திலேயே குவிண்டாலுக்கு ரூ. 7,000 விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.