ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சட்டப்பேரவை உறுப்பினா்அலுவலகங்கள் பூட்டி சீல் வைப்பு

சட்டப்பேரவை தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை அலுவலகங்களை அலுவலா்கள் திங்கள்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:30 pm

DIN

சட்டப்பேரவை தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை அலுவலகங்களை அலுவலா்கள் திங்கள்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகங்களைத் தோ்தல் ஆணையம் மூட உத்தரவிட்டதைத் தொடா்ந்து திங்கள்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தோ்தல் நடைத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஒன்றிய குழுத் தலைவா்கள் பயன்படுத்திய நான்கு சக்கர வாகனங்கள், மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் நிா்வாகக் குழு தலைவா்கள் பயன்படுத்திய வாகனங்கள் அனைத்தும் மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வாகனங்களைத் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் பயன்படுத்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.