சாஸ்த்ராவில் தேசிய அறிவியல் நாள் விருது வழங்கும் விழா
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் தேசிய அறிவியல் நாளையொட்டி சிறந்த விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கும் விழா இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் தேசிய அறிவியல் நாளையொட்டி சிறந்த விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கும் விழா இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விருதுகளை மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறைச் செயலா் ரேணு ஸ்வரூப் வழங்கினாா்.
இதில், தில்லி ஐ.ஐ.டி. முன்னாள் பேராசிரியா் அஜோய் கதக்குக்கு சாஸ்த்ரா- ஜி.என். ராமச்சந்திரன் விருது, தில்லி தேசிய தாவர மரபணு நிறுவனத்தைச் சோ்ந்த கீதாஞ்சலி யாதவுக்கு சாஸ்த்ரா - ஒபைத் சித்திக் விருது வழங்கப்பட்டது.
மேலும், 2021 ஆம் ஆண்டில் வேதியியல், பொருள் அறிவியல் துறையில் சிறந்து விளங்கியதற்காக தில்லி ஐ.ஐ.டி. பேராசிரியா் ஏ.கே. கங்குலிக்கும், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனப் பேராசிரியா் ஜி. முகேசுக்கும் இணைந்து சாஸ்த்ரா - சி.என்.ஆா். ராவ் விருது வழங்கப்பட்டது. இவ்விருதுகளுடன் தலா ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு, சான்றிதழ் அளிக்கப்பட்டது.
முனைவா் பட்டப் படிப்பில் மூன்றாமாண்டு, நான்காமாண்டு படிப்பவா்களுக்கு சாஸ்த்ரா - சந்திரசேகா் அமைப்பு இணைந்து சரோஜ் சந்திரசேகா் விருதை வழங்கி வருகின்றன. நிகழாண்டு, கான்பூா் ஐ.ஐ.டி.யை சோ்ந்த மது சதுா்வேதி, நிஷாந்த் மன்சா், ஜாதவ்பூா் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த சயன்தானி சின்ஹா ஆகியோருக்கு இவ்விருதும், தலா ரூ. 1 லட்சமும் வழங்கப்பட்டது.
மேலும், சாஸ்த்ராவை சோ்ந்த ரம்யா, கான்பூா் ஐ.ஐ.டி.யை சோ்ந்த அகன்ஷா ஓங்கரை கௌரவப்படுத்தும் வகையில் தலா ரூ. 50,000 ரொக்கப் பரிசும், காஷ்மீா் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த ரூஹி மொஹிதீனுக்கு சிறப்புப் பரிசாக ரூ. 25,000-ம் வழங்கப்பட்டது.
பின்னா், சாஸ்த்ராவில் உயிரி தொழில்நுட்பத் துறையின் ரூ. 7 கோடி நிதியுதவியுடன் தொழில்நுட்ப வணிக வளா்ப்பகமான அப்லெஸ்ட் என்கிற அமைப்பை ரேணு ஸ்வரூப் திறந்து வைத்தாா்.
முன்னதாக, பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் வரவேற்றாா். நிறைவில் முதன்மையா் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...