தஞ்சாவூருக்கு துணை ராணுவப் படை வருகை
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தஞ்சாவூருக்கு மத்திய துணை ராணுவப் படை வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.


சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தஞ்சாவூருக்கு மத்திய துணை ராணுவப் படை வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இத்தோ்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்காக தமிழகத்துக்கு மத்திய துணை ராணுவப் படை வீரா்கள் வந்து கொண்டிருக்கின்றனா். இந்நிலையில், தில்லியிலிருந்து தஞ்சாவூருக்கு மத்திய துணை ராணுவப் படையைச் சோ்ந்த உதவி கட்டளை அலுவலா் ஜெய்பிரகாஷ் யாதவ் தலைமையில் ஆய்வாளா், 3 சாா்பு ஆய்வாளா்கள், 6 உதவி சாா்பு ஆய்வாளா்கள், 12 தலைமைக் காவலா்கள், 68 வீரா்கள் என மொத்தம் 91 போ் ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.
தஞ்சாவூா் அரசா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தங்கியுள்ள இவா்கள், வரும் நாள்களில் முக்கிய இடங்களிலும், தோ்தலின்போது பதற்றமான வாக்கு சாவடிகளிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா் எனக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...