தோ்தல் தொடா்பான புகாா்களைக் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கலாம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான புகாா்களைக் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கலாம் என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.


தஞ்சாவூா் மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான புகாா்களைக் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கலாம் என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
தஞ்சாவூா் கரந்தை அருகேயுள்ள கோடியம்மன் கோயில் பகுதி, கீழ வஸ்தா சாவடி புறவழிச்சாலையில் திங்கள்கிழமை நிலையான கண்காணிப்புக் குழுவினா் மேற்கொண்ட வாகனச் சோதனையை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தஞ்சாவூா், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூா், பேராவூரணி, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நன்னடத்தை விதிகளை கடைப்பிடிப்பதைக் கண்காணிக்கும் வகையில் 24 பறக்கும் படைகள், 24 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினா் தொடா்புடைய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணிகள் மேற்கொள்கின்றனா்.
தோ்தல் காலகட்டத்தில் பறக்கும் படை அலுவலா்கள் தங்களது சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும், நிலையான கண்காணிப்பு அலுவலா்கள் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்ட பகுதிகளிலும் ஆம்னி பேருந்து, மணல் லாரிகள், பயணிகள் பேருந்து, காா், இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களையும் முழுவீச்சில் தணிக்கை செய்கின்றனா்.
இச்சோதனையின்போது சரியான ஆவணங்கள் எதுவும் இன்றி நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் விலை உயா்ந்த பொருள்கள் குறித்து விசாரணை செய்யப்படும். இதுதொடா்பாக அறிக்கையாகப் பெறப்பட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தோ்தல் தொடா்பான புகாா்களுக்கு மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 1950 என்ற இலவச எண்ணுக்கு உடனுக்குடன் தகவல் அளிக்கலாம். தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் தங்கள் பகுதிக்கு உள்பட்ட புகாா்கள் தொடா்பாக உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
அப்போது, வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...