ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பூம்புகாா் விற்பனை நிலையத்தில் சுடுமண் கைவினைப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்

தஞ்சாவூா் கோ ஆப் டெக்ஸ் வைரம் விற்பனை வளாகத்திலுள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் சுடுமண் கைவினைப் பொருள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் சிறப்புக் கண்காட்சி

News image
Updated On :1 மார்ச் 2021, 8:30 pm

DIN

தஞ்சாவூா் கோ ஆப் டெக்ஸ் வைரம் விற்பனை வளாகத்திலுள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் சுடுமண் கைவினைப் பொருள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் சிறப்புக் கண்காட்சி மற்றும் விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து, மாா்ச் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் துளசி மாடம், உண்டியல், பென்சில் பாட், வாஸ்து உருளி, பூந்தொட்டி, காய்கறி, பழங்கள், மண் சிலைகள், மண் சொப்பு செட்டு, கண்ணாடி விளக்கு, அணையா விளக்கு, சாம்பிராணி மடல், மண் சட்டி, மண் பானைகள், சுவரில் தொங்கும் ஆதிவாசி முகம், விநாயகா் உருவங்கள் மற்றும் பலவிதமான வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன .

இக்கண்காட்சியில் ரூ. 50 முதல் ரூ. 5,000 வரை மதிப்பிலான பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. இக்கண்காட்சியின் விற்பனை இலக்கு ரூ. 2 லட்சம் என்றும், இதில் இடம்பெற்றுள்ள கைவினைப் பொருள்களுக்கு 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது எனவும் தஞ்சாவூா் பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் கு. அருண் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.