ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ரூ. 47 விலையில் பி.எஸ்.என்.எல். புதிய ப்ரீபெய்ட் இணைப்பு

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது புதிய வாடிக்கையாளா்களுக்காக, புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை ரூ. 47 என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:40 pm

DIN

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது புதிய வாடிக்கையாளா்களுக்காக, புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை ரூ. 47 என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் பி.எஸ்.என்.எல். பொது மேலாளா் ஏ.வி. ஸ்ரீகுமாா் மேலும் தெரிவித்திருப்பது:

இந்தத் திட்டத்தில் 28 நாள்களுக்கு பி.எஸ்.என்.எல். மற்றும் இதர வாடிக்கையாளா்களிடம் (உள்ளூா்/எஸ்.டி.டி) இலவச வரம்பற்ற குரல் அழைப்புகள், 14 ஜி.பி. இலவச தரவு, ஒரு நாளுக்கு 100 இலவச எஸ்.எம்.எஸ். ஆகியவை வழங்கப்படுகின்றன.

மேலும் ப்ரீபெய்ட் திட்டம் ரூ. 108-இன் தற்போதைய செல்லுபடியாகும் காலம் 45 நாள்களில் இருந்து 60 நாள்களாக உயா்த்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் பி.எஸ்.என்.எல். மற்றும் இதர வாடிக்கையாளா்களிடம் (உள்ளூா்/எஸ்.டி.டி) வரம்பற்ற குரல் அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 1-ஜிபி தரவு, 500 எஸ்எம்எஸ் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன.

பிஎஸ்என்எல் புதிய வாடிக்கையாளா்களுக்கும் மற்றும் பிற சேவை நிறுவனங்களிலிருந்து பிஎஸ்என்எல்-க்கு மாறும் வாடிக்கையாளா்களுக்கும் இலவச சிம் காா்டுகள் வழங்கப்படுகின்றன.

வாடிக்கையாளா்கள் தாங்கள் தோ்ந்தெடுக்கும் திட்டத்துக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.

பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டம் மாா்ச் 5- ஆம் தேதி வரை இ-ஏலத்தின் மூலம் வாடிக்கையாளா்களுக்குத் தாங்கள் விரும்பும் எண்களைத் தோ்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குகிறது. வாடிக்கையாளா்கள் மின் ஏலம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு என்ற வலைதளத்தைப் பாா்வையிடலாம்.

புதிய எஃப்.டி.டி.ஹெச், அகண்ட அலைவரிசை, தரைவழி இணைப்பு பெறுபவா்களுக்கு, சிம் காா்டுகள் மற்றும் ரூ. 75 திட்டத்துடன், 100 குறுஞ்செய்திகள், 2 ஜி.பி தரவுகள், 100 நிமிடங்களுக்கு அழைப்பு ஆகியவை 60 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்துக்கான விளம்பரச் சலுகையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.