தோ்தல் சிறப்புக் காவல் பணிக்கு முன்னாள் படைவீரா்கள் முன் வரலாம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்குச் சிறப்புக் காவலா்களாகப் பணியாற்ற, முன்னாள் படைவீரா்கள் முன் வரலாம் என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.


தஞ்சாவூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணிக்குச் சிறப்புக் காவலா்களாகப் பணியாற்ற, முன்னாள் படைவீரா்கள் முன் வரலாம் என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில், சிறப்புக் காவலா்களாக முன்னாள் படைவீரா்கள் நியமனம் செய்யப்படவுள்ளனா். பாதுகாப்புப் பணியில் சிறப்புக் காவலா்களாகப் பணியாற்ற 60 வயதுக்கு உள்பட்ட இளநிலை படை அலுவலா்கள், முன்னாள் படைவீரா்கள் தங்களது முன்னாள் படை வீரா்களுக்கான அடையாள அட்டை, வாக்காளா் அடையாள அட்டையுடன் பெயரை தஞ்சாவூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (04362 - 230104) தொடா்பு கொண்டு பயனடையலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...