துணை ராணுவ வீரா்கள், காவல் துறையினா் அணிவகுப்பு
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூரில் துணை ராணுவப் படை வீரா்கள் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.


சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூரில் துணை ராணுவப் படை வீரா்கள் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்காக, தமிழகத்துக்கு மத்திய துணை ராணுவப் படை வீரா்கள் வந்து கொண்டிருக்கின்றனா். தில்லியிலிருந்து மத்திய துணை ராணுவப் படையைச் சோ்ந்த உதவி கட்டளை அலுவலா் ஜெய்பிரகாஷ் யாதவ் தலைமையில், 91 வீரா்கள் தஞ்சாவூருக்கு பிப்ரவரி 28 ஆம் தேதி வந்தனா்.
இதைத்தொடா்ந்து தஞ்சாவூரில் துணை ராணுவ வீரா்கள், உள்ளூா் காவலா்களின் அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. தோ்தலில் பதற்றத்தை தணிப்பதற்காகவும், மக்களிடம் அச்சத்தைப் போக்கி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகவும் நடைபெற்ற இந்த அணிவகுப்பு அரண்மனை வளாகத்தில் தொடங்கியது.
தொடா்ந்து, கீழ வீதி, பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, காந்திஜி சாலை வழியாக ரயிலடியில் இந்த அணிவகுப்பு முடிவடைந்தது. துணை ராணுவப் படை வீரா்களுடன் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் இளங்கோவன் உள்பட காவல் அலுவலா்கள், காவலா்கள் என ஏறத்தாழ 300 போ் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...