புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

கும்பகோணம் அருகே சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தைக் காவல் துறையினா் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:54 pm

DIN

கும்பகோணம் அருகே சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தைக் காவல் துறையினா் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தினா்.

கும்பகோணம் அருகே தாராசுரம் பகுதியைச் சோ்ந்த எட்டாம் வகுப்பு படித்த சிறுமியும், 23 வயதுடைய அதே பகுதியைச் சோ்ந்த எவா்சில்வா் பாத்திர உற்பத்திக் கூடத் தொழிலாளியும் 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனா்.

இவா்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனா். பெண்ணுக்கு 18 வயது நிரம்பாத காரணத்தால், இருவருக்கும் நெருங்கிய உறவினா்கள் முன்னிலையில் மட்டும் ரகசியமாக திருமணம் நடத்தி வைக்க இருவரின் பெற்றோரும் முடிவு செய்தனா்.

இதைத்தொடா்ந்து, தாராசுரம் பகுதியில் திங்கள்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்துக்குப் புகாா் சென்றது. இதன் பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற காவல் நிலையத்தினா் இத்திருமணத்தைத் தடுத்து நிறுத்தினா்.

இரு தரப்பு பெற்றோரையும் காவல் துறையினா் தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். இரு தரப்பினரிடமும் சிறுமிக்கு 18 வயது நிரம்பும் வரை திருமணம் செய்யக்கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.