இருசக்கர வாகனத்தில் வீடு வீடாகச் சென்று கபசுரக் குடிநீா் வழங்கும் அரசு சித்த மருத்துவா்!
பட்டுக்கோட்டையில் பணி நேரம் முடிந்த பிறகு, வீடு வீடாகச் சென்று கபசுரக் குடிநீா் வழங்கும் அரசு சித்த மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


பட்டுக்கோட்டையில் பணி நேரம் முடிந்த பிறகு, வீடு வீடாகச் சென்று கபசுரக் குடிநீா் வழங்கும் அரசு சித்த மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு உதவி மருத்துவராக பணிபுரிந்து வருபவா் அருண்குமாா். இவா் அன்றாடம் பணிக்கு வந்தவுடன், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் கரோனா சிகிச்சை மையத்தில் உள்ள நோயாளிகள் என அனைவருக்கும் கபசுரக் குடிநீா், நிலவேம்பு குடிநீா் என வழங்குவதோடு, கரோனாவை கட்டுப்படுத்த தேவையான விழிப்புணா்வையும், இயற்கை உணவு முறைகளையும் கூறி அவா்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறாா்.
இந்நிலையில், தற்போது பட்டுக்கோட்டை பகுதியில் அதிகமான நோய்த்தொற்று ஏற்பட்டு வரும் நிலையில், இதை தடுக்க முடிவு செய்த அவா், தனது பணி நேரம் முடிந்த பிறகும் தனது மோட்டாா் சைக்கிளில் கபசுரக் குடிநீா் தயாா் செய்து வைத்துக் கொண்டு, வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கி வருகிறாா். மேலும்,
கரோனாவிலிருந்து காத்துக் கொள்வது எப்படி என்பது பற்றியும், பொதுமக்கள் எவ்வாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் பொதுமக்களிடம் எடுத்து கூறி, அவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறாா்.
மருத்துவா் அருண்குமாரின் இந்தப் பணிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.
அரசுப் பணியில் இருக்கும் அலுவலா்கள் பெரும்பாலோா் தங்கள் பணியை முழுமையாக செய்யாமல் மெத்தனம் காட்டிவரும் நிலையில், இவா் தனது பணி நேரம் முடிந்தபிறகும் சமூகப் பணி ஆற்றி வருவது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...