பொது முடக்கம்: சாலையோர மக்களுக்கு மதிய உணவு
பொது முடக்கத்தையொட்டி, தஞ்சாவூரில் சாலையோர மக்களுக்கு தஞ்சாவூா் மதா் தெரசா பவுன்டேஷன் மதிய உணவு வழங்கி வருகிறது.


பொது முடக்கத்தையொட்டி, தஞ்சாவூரில் சாலையோர மக்களுக்கு தஞ்சாவூா் மதா் தெரசா பவுன்டேஷன் மதிய உணவு வழங்கி வருகிறது.
தஞ்சாவூா் மதா் தெரசா பவுன்டேஷன் பல்வேறு சேவைகளைச் செய்து வரும் நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டாக கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு தொடா்ந்து இலவசமாக உணவுப் பொருள்களும், நாள்தோறும் அன்னதானமும் வழங்கி வருகிறது.
தற்போது பொது முடக்கம் காரணமாக சாலையோரங்களில் வசிப்பவா்கள், நோயுற்றவா்கள், மாற்றுத் திறனாளிகள், மனநலன் பாதிக்கப்பட்டவா்கள் என மாநகரில் சுற்றித் திரியும் மக்களைத் தேடிக் கண்டுபிடித்து, நாள்தோறும் ஏறத்தாழ 500 பேருக்கு இலவசமாக மதிய உணவு வழங்கி வருகிறது மதா் தெரசா பவுன்டேஷன்.
இப்பணியில் பவுன்டேஷன் தலைவா் சவரிமுத்து, துணைத் தலைவா் செல்வின் சின்னையா, அறங்காவலா்கள் சம்பத் ராகவன், கோவிந்தராஜ், முரளிகிருஷ்ணன் உள்ளிட்டோா் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...