பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் அண்ணா காலனியை சோ்ந்த சக்திவேல் மனைவி தாமரைச்செல்வி (57).


தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் அண்ணா காலனியை சோ்ந்த சக்திவேல் மனைவி தாமரைச்செல்வி (57).
இவா் கணவா் நடத்தி வரும் மளிகைக் கடையில் வியாழக்கிழமை வியாபாரம் செய்து கொண்டிருந்தாா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவா் இவரிடம் பொருள்கள் கேட்பதுபோல வந்தனா். அவா்கள் கூறிய பொருளை எடுத்துக் கொண்டிருந்த தாமரைச்செல்வியின் கழுத்திலிருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனா்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...