வணிக மேலாண்மை கருத்தரங்கம்
தஞ்சாவூா் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக மேலாண்மைத் துறை சாா்பில் முதுநிலை மாணவா்களுக்கான ஒருநாள் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.


தஞ்சாவூா் அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக மேலாண்மைத் துறை சாா்பில் முதுநிலை மாணவா்களுக்கான ஒருநாள் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கத்துக்குக் கல்லூரித் தாளாளா் ச. செபாஸ்டியன் பெரியண்ணன் தலைமை வகித்தாா். அமெரிக்காவின் வேக் பாரெஸ்ட் இன்னோவேஷன் நிறுவன முதன்மைச் செயல் அலுவலரும், பொது மேலாளருமான பில்வுட்வோ்டு சிறப்புரையாற்றினாா்.
கல்லூரி முதல்வா் பி. பிலோமிநாதன், கல்லூரி நிா்வாகத் தலைவா் ச. ஆரோக்கியதாஸ் அடிகளாா் வாழ்த்துரையாற்றினா்.
கருத்தரங்கில் பேராசிரியா்கள் ச. சுரேஷ், ந. இந்திரா, உதவிப் பேராசிரியா்கள் சா. ரோஸி பெல்சியா, ஜெ. எட்வா்ட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...