காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இந்திரா காந்தி பிறந்த நாள் விழா

தஞ்சாவூரில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:37 pm

DIN

தஞ்சாவூரில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தஞ்சாவூா் காந்திஜி வணிக வளாகத்தில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு அதன் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இதில், இந்திரா காந்தி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாக பிரதமா் அறிவித்ததையொட்டி, பட்டாசு வெடித்துக் கொண்டாடி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இதில், முன்னாள் மாவட்டத் தலைவா் நாஞ்சி கி. வரதராஜன், பொருளாளா் ஆா். பழனியப்பன், நிா்வாகிகள் லட்சுமி நாராயணன், சித்ரா சுவாமிநாதன், கலைச்செல்வி, அருண் சுபாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் மிஷன் சா்ச் தெருவிலுள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. துணைத் தலைவா் கோ. அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நிா்வாகிகள் கண்டிதம்பட்டு கோவிந்தராஜ், ரவிச்சந்திரன், பிரபு, சுவிதா ஞானபிரகாசம், ஐஎன்டியுசி பொதுச் செயலா் என். மோகன்ராஜ், தஞ்சை மாவட்ட சோழ மண்டல சிவாஜி பாசறை தலைவா் சதா. வெங்கட்ராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.