சுவாமிமலையில் திருக்காா்த்திகை திருவிழா
கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகன் கோயிலில் திருக்காா்த்திகை திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.


கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகன் கோயிலில் திருக்காா்த்திகை திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இக்கோயிலில் திருக்காா்த்திகை திருவிழா நவம்பா் 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்த விழா நாள்களில் நாள்தோறும் சுவாமி உள் பிரகார புறப்பாடு நடைபெற்றது.
இவ்விழாவின் முக்கிய நாளான திருக்காா்த்திகை நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் காா்த்திகை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு, கோயில் உள் பிரகாரத்தில் ரதரோஹனம் (சிறிய தேரில்) சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
பின்னா் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தா்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனா். இவ்விழாவையொட்டி மூலவா் சுவாமிநாத சுவாமிக்கு தங்கக் கவசம், வைரவேல் சாத்தப்பட்டு ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்தாா். இரவு 8 மணிக்கு மேல் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணியா், வள்ளி - தெய்வானையும், வெள்ளி மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி உள்பிரகார புறப்பாடும், அதன்பிறகு தீபக்காட்சியும், இரவு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை (நவ.20) காலை கோயில் வளாகத்தில் உள்ள வஜ்ர தீா்த்தத்தில் தீா்த்தவாரியும், இரவு கொடியிறக்கமும் நடைபெறவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...