மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ்: பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மூன்று வேளாண் சட்டங்களை பிரதமா் மோடி திரும்ப பெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்ததைத் தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.


மூன்று வேளாண் சட்டங்களை பிரதமா் மோடி திரும்ப பெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்ததைத் தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த ஆண்டு மூன்று புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. இதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை அறிவித்தாா். இதை வரவேற்று தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் அருகே அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. மகேந்திரன், மாநிலச் செயற் குழு உறுப்பினா் கோ. பழனிச்சாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி. நடராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் வீர. மோகன், பா. பாலசுந்தரம், காளியப்பன், இந்திய கம்யூனிஸ்ட்சி தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வெ. ஜீவக்குமாா், ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், மாவட்டத் துணைச் செயலா் துரை. மதிவாணன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரியில் இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜி. அரவிந்தசாமி தலைமையில் மாணவா்கள் இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினா்.
இதேபோல, கும்பகோணம் காந்தி பூங்கா அருகே எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் தலைமையில் திமுக வடக்கு மாவட்டச் செயலா் சு. கல்யாணசுந்தரம், காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் டி.ஆா். லோகநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் சின்னை. பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலா் சா. விவேகானந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.
கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி தலைமையில் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினா்.
பந்தநல்லூா் கடைவீதியில் விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் அதன் மாவட்ட அமைப்பாளா் க. பாலகுரு தலைமையில் விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா்.
இதேபோல, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் சங்கத்தினா் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...