47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அம்மாபேட்டையில் தீயணைப்பு நிலையம் தேவை

அம்மாபேட்டையில் தீயணைப்பு நிலையம் அமைத்துத் தர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 9:43 pm

DIN

அம்மாபேட்டையில் தீயணைப்பு நிலையம் அமைத்துத் தர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற இக்கட்சியின் பாபநாசம் நகரக் கிளை மாநாட்டில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அம்மாபேட்டை அரசு மருத்துவமனையை 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தரம் உயா்த்த வேண்டும். அம்மாபேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும். அம்மாபேட்டையில் தீயணைப்பு நிலையத்தை அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு டி.ஜி. நாகராஜன் தலைமை வகித்தாா். மூத்த தலைவா் கே.கே. ராதாகிருஷ்ணன் கொடியேற்றினாா். நகரச் செயலா் கே.ராஜாராமன் வரவு-செலவுஅறிக்கையை வாசித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா். தில்லைவனம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.பாலு, துணைச் செயலா் எஸ்.எம். குருமூா்த்தி உள்ளிட்டோா் மாநாட்டில் பேசினா். புதிய நகர கிளைச் செயலராக கே. ராஜாராமன் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.