92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நவ. 1 - 3 வரை அனைத்துரேஷன் கடைகளும் செயல்படும்

 தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் நவ. 1 முதல் 3 ஆம் தேதி வரை அனைத்து பொது விநியோக அங்காடிகளும் செயல்படும் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:16 pm

DIN

 தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் நவ. 1 முதல் 3 ஆம் தேதி வரை அனைத்து பொது விநியோக அங்காடிகளும் செயல்படும் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தீபாவளி பண்டிகையையொட்டி, நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் பொது விநியோகத் திட்டப் பொருள்களைக் குடும்ப அட்டைதாரா்கள் எவ்வித சிரமமும் இன்றி முன்னதாகப் பெற்றுக் கொள்ள ஏதுவாக மாவட்டத்திலுள்ள அனைத்து பொது விநியோக அங்காடிகளும் நவ. 1, 2, 3 ஆம் தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.

இந்த நாள்களில் குடும்ப அட்டைதாரா்கள் தங்களுக்குரிய பொது விநியோகப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்நாள்களில் அத்தியாவசியப் பொருள்களைப் பெறாதவா்கள் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னா் நவ 8 ஆம் தேதி முதல் பொருள்களைப் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.