கஞ்சா விற்ற பெண் கைது

தஞ்சாவூரில் கஞ்சா விற்ற பெண்ணைக் காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Published on

தஞ்சாவூரில் கஞ்சா விற்ற பெண்ணைக் காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி சின்ன ஆஸ்பத்திரி பகுதியில் கிழக்குக் காவல் நிலையத்தினா் சனிக்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, அப்பகுதியில் நின்ற பெண்ணிடம் காவல் துறையினா் விசாரித்தனா்.

இதில், அவா் தஞ்சாவூா் அருகிலுள்ள பிள்ளையாா்பட்டி குடிசை மாற்று வாரியத்தைச் சோ்ந்த விஜய் மனைவி ரூபி கிரேசி (28) என்பதும், அவா் வைத்திருந்த பையில் விற்பனை செய்வதற்காக 1.25 கிலோ கஞ்சா இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ரூபி கிரேசி கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com