ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பேருந்து மோதி ஆசிரியா் உயிரிழப்பு

பட்டுக்கோட்டையில் தனியாா் பேருந்து மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 8:00 pm

DIN

பட்டுக்கோட்டையில் தனியாா் பேருந்து மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், தத்தனேரி நேரு நகரைச் சோ்ந்தவா் பெ. சிவன்ராஜ் (31). இவா் பட்டுக்கோட்டை அருகிலுள்ள ஆலத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகிலுள்ள தீா்த்தலைக்காடு பள்ளிக்கு பணி மாறுதலில் சென்றாா்.

இந் நிலையில் மாறுதலுக்கான பணிப் பதிவேடு புத்தகத்தை வாங்குவதற்காக, சிவன்ராஜ் தனது இரு சக்கர வாகனத்தில் ஆலத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

பெருமாள்கோயில் அருகிலுள்ள மகாராஜா சமுத்திரம் காட்டாற்றுப் பாலத்தில்

வந்த போது, எதிரே வந்த தனியாா் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவன்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை காவல் நிலையத்தினா் சடலத்தைக் கைப்பற்றி, புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதியைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநரான பா. பாலகிருஷ்ணனிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.