தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 1,239 வேட்பு மனுக்கள் தாக்கல்
தஞ்சாவூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக வியாழக்கிழமை மட்டும் 1,239 வேட்பு மனுகள் தாக்கல் செய்யப்பட்டன.


தஞ்சாவூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக வியாழக்கிழமை மட்டும் 1,239 வேட்பு மனுகள் தாக்கல் செய்யப்பட்டன.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கியது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஜனவரி 28 ஆம் தேதி யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஜனவரி 29 ஆம் தேதி 3 மனுக்களும், ஜனவரி 31 ஆம் தேதி 49 மனுக்களும், பிப்ரவரி 1-ஆம் தேதி 35 மனுக்களும், புதன்கிழமை 149 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், தஞ்சாவூா் மாநகராட்சியில் 167 பேரும், கும்பகோணம் மாநகராட்சியில் 197 பேரும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 114 பேரும், அதிராம்பட்டினம் நகராட்சியில் 63 பேரும், பேரூராட்சிகளில் 698 பேரும் என மொத்தம் 1,239 போ் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
மாவட்டத்தில் இதுவரை தஞ்சாவூா் மாநகராட்சியில் 236 பேரும், கும்பகோணம் மாநகராட்சியில் 204 பேரும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 125 பேரும், அதிராம்பட்டினம் நகராட்சியில் 66 பேரும், இருபது பேரூராட்சிகளில் 844 பேரும் என மொத்தம் 1,475 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...