8 மாதங்களில் ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றம் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் திமுகஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேறியுள்ளன என்றாா் அக்கட்சியின் இளைஞரணிச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்.


தமிழகத்தில் திமுகஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேறியுள்ளன என்றாா் அக்கட்சியின் இளைஞரணிச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி தஞ்சாவூா் கல்லுக்குளத்தில் வியாழக்கிழமை காலை பிரசாரம் செய்த அவா் பேசியது:
திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளன. இதில், முக்கியமான வாக்குறுதிகளான கரோனா கால நிவாரணம் ரூ. 4,000, அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் கட்டணக் குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு உள்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்னும் பல்வேறு வாக்குறுதிகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படவுள்ளன.
8 மாதங்களில் 10 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் சிறந்த முதல்வா் மு.க. ஸ்டாலின்தான் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் சிறந்த முதல்வராக ஸ்டாலின் செயல்படுகிறாா் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.
இரு பெண்கள் குறுக்கிட்டு கோரிக்கை: உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டாா். அப்போது குறுக்கிட்ட தங்கம் என்ற பெண், தன்னுடைய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும், அதைத் தள்ளுபடி செய்து தருமாறும் கோரிக்கை விடுத்தாா். மனுவாக எழுதி தருமாறும், அதை வைத்து தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தாா்.
இதைத்தொடா்ந்து, உதயநிதி ஸ்டாலின் பேசும் போது குறுக்கிட்ட மற்றொரு பெண்ணான வண்டிக்காரத் தெருவைச் சோ்ந்த கவிதா, நானும் திருக்குவளையைச் சோ்ந்தவள்தான் என்றும், மூன்று பிள்ளைகளை வைத்து கஷ்டப்படுவதாகவும், நிதியுதவி செய்யுமாறும் கோரிக்கை விடுத்தாா். அதை மனுவாக எழுதிக் கொடுக்குமாறும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தாா்.
பின்னா் கீழவாசல், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...