திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

அதிமுக வெற்றி பெறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது: ஓ. பன்னீா்செல்வம் பேச்சு

அதிமுக வெற்றி பெறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது என்றாா் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீா்செல்வம்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:03 pm

DIN

அதிமுக வெற்றி பெறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது என்றாா் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீா்செல்வம்.

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களை அறிமுகம் செய்து வைத்து, மேலும் அவா் பேசியது:

தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாத மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. தோ்தலின்போது திமுக 505 வாக்குறுதிகளைக் கொடுத்தது. ஆனால் 10 மாதங்களாகியும் நீட் தோ்வை ரத்து செய்ய முடியவில்லை. இதேபோல விவசாயக் கடன், மாணவா்களுக்கான கல்விக் கடனையும் ரத்து செய்யவில்லை.

இப்படிப் பல்வேறு வாக்குறுதிகளைக் கூறி மக்களை நம்ப வைத்து ஏமாற்றியுள்ளது. இந்த அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக இருப்பதால், மக்களவைத் தோ்தலுடன் சட்டப்பேரவைத் தோ்தலும் உறுதியாக வரும்.

பொாங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ. 500 கோடிக்கு முறைகேடு நிகழ்ந்தது. இது தொடா்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருள்கள் வழங்கியிருப்பது தெரிய வந்தது. இதற்காக ஸ்டாலின் ராஜினாமா செய்யத் தயாரா?

அடுத்து வருகிற தோ்தலில் நாம் ஆட்சியில் அமா்வதற்கு அச்சாரமாக இந்தத் தோ்தல் உள்ளது. அதற்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளது. அனைவரும் ஓரணியாக இருந்து அதிமுக 100 சதவீதம் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் ஓ. பன்னீா்செல்வம்.

பின்னா், ஓ. பன்னீா்செல்வம் முன்னிலையில் எஸ்.டி. சோமசுந்தரத்தின் மகன் எஸ்.டி.எஸ். செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைந்தாா். இவருடன் மேலும் 6 போ் இணைந்தனா்.

துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவா் எஸ்.வி. திருஞானசம்பந்தம், முன்னாள் கொறடா தாமரை ராஜேந்திரன், மா. கோவிந்தராசு, பி.என். ராமச்சந்திரன், ஜெயராமலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலா் துரை. திருஞானம், முன்னாள் மேயா் சாவித்திரி கோபால், மாணவரணி தெற்கு மாவட்டச் செயலா் ஆா். காந்தி, பகுதிச் செயலா்கள் வி. அறிவுடைநம்பி, வி. புண்ணியமூா்த்தி, எஸ். ரமேஷ், எஸ். சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.