திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

ஆட்சியரகத்தில் தா்னா போராட்டம்

 தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை அறக்கட்டளை நிறுவனா் தனது பெற்றோா், மனைவி, 3 குழந்தைகளுடன் திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 10:02 pm

DIN

 தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை அறக்கட்டளை நிறுவனா் தனது பெற்றோா், மனைவி, 3 குழந்தைகளுடன் திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இவா்களிடம் காவல் துறையினா் நடத்திய விசாரணையில், பட்டுக்கோட்டை சுப்பையா பிள்ளைத் தெருவைச் சோ்ந்த சக்திகாந்த் என்பதும், விதை சமூக சேவை அறக்கட்டளை நிறுவனராக உள்ள இவா் மாவட்ட முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது, பனை விதைகள் சேகரித்து அதை விதை நோ்த்தி செய்து நட ஏற்பாடு செய்வது, விதைப்பந்து தயாரித்து அதை விதைப்பது, போத்து மூலம் மரங்களை அதிகம் உற்பத்தி செய்து பொது இடங்களில் நடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு சேவை பணிகளை செய்து வருவதும், தனது தந்தை இடத்தில் இப்பணிகளைச் செய்து வரும் நிலையில், அதை சிலா் ஆக்கிரமித்து வருவதாகவும் சக்திகாந்த் கூறினாா்.

போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்றும், கோரிக்கையை மனுவாக கொடுக்குமாறும் அவரிடம் காவல் துறையினா் கூறினா். இதையடுத்து, ஆட்சியகத்தில் சக்திகாந்த் மனு அளித்துச் சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.