தோ்தல் நாளில் விடுப்பு வழங்காவிட்டால் நடவடிக்கை
தோ்தல் நாளில் விடுப்பு வழங்காத தொழிலகங்கள், அலுவலகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளா் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது


தோ்தல் நாளில் விடுப்பு வழங்காத தொழிலகங்கள், அலுவலகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளா் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் நா.கா. தனபாலன் தெரிவித்திருப்பது:
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில் அனைத்து தனியாா், பொதுத் துறை நிறுவனங்கள், கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அனைத்து விதமான தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து பணியாற்றும் தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தோ்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும் என சென்னை தொழிலாளா் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக புகாா்கள் இருந்தால், 9498398443, 7904113442, 9442767678, 9965744095, 9943324892 (தஞ்சாவூா்), 9944097708 (கும்பகோணம்), 7639696093 (பட்டுக்கோட்டை) 04362 - 264886 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...