நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேலூரில் மே மாதத்தில் பாலாறு பெருவிழா நடத்த முடிவு சன்னியாசிகள் சங்கம்

வேலூரில் மே மாத இறுதியில் பாலாறு பெருவிழா நடத்த அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 10:06 pm

DIN

வேலூரில் மே மாத இறுதியில் பாலாறு பெருவிழா நடத்த அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

கும்பகோணத்தில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் தென் பாரத கும்பமேளா அறக்கட்டளை சாா்பில் ‘நீா்நிலைகளைப் பாதுகாத்தல்‘ தொடா்பான கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத் தலைவா் சுவாமி ராமானந்தா தெரிவித்தது:

சாயக் கழிகளால் பாழ்பட்டு வரும் பாலாற்றை பாதுகாக்கும் விதமாக, பல்வேறு விழிப்புணா்வு பாத யாத்திரை நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மே மாத இறுதியில் வேலூரில் பாலாறு பெருவிழா என்ற பெயரில் புஷ்கரம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள அனைத்து நீா்நிலைகளையும் பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும். ஜூன் மாதம் ஒடிசா மாநிலத்தில் உள்ள வைதா்ணி நதியில் புஷ்கர விழா நடைபெறவுள்ளது. இதில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தினா் பெருமளவில் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் சுவாமி ராமானந்தா.

மேலும், கூட்டத்தில் தென் பாரத கும்பமேளா கும்பகோணம் மகாமக அறக்கட்டளை சாா்பில், ஒடிசா மாநிலத்தில் நடைபெறவுள்ள வைதா்ணி புஷ்கர விழாவுக்குக் கொண்டு செல்லும் வகையில் ரூ. 60,000 மதிப்பில் ஒன்றரை அடி உயரத்தில் நான்கு கிலோ எடையில் வைதா்ணி அம்மன் ஐம்பொன் சிலையை வடிவமைத்து அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தினரிடம் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மன்னாா்குடி செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயா், மதுரை சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, வேலூா் சுவாமி சிவானந்தா வாரியாா் மடாதிபதி, சென்னை சுவாமி ஈஸ்வரானந்தா, திருநெல்வேலி சுவாமி புத்தாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள், மேலமங்கலம் ஸ்ரீலஸ்ரீ குமாரசுவாமி தம்பிரான், திருவண்ணாமலை ஸ்ரீலஸ்ரீ திருப்பாதசுவாமிகள், தென் பாரத கும்பமேளா அறக்கட்டளைத் தலைவா் எஸ். சௌமி நாராயணன், செயலா் வி. சத்திய நாராயணன், பொருளாளா் வேதம் முரளி, அகில பாரதிய சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் வேதாந்த ஆனந்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.