திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

மாரியம்மன் கோவிலில் 1,008 பால்குட பெருந்திருவிழா

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோவிலில் மாசிமகத் திருநாளையொட்டி, 1,008 பால்குட பெருந்திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:53 pm

DIN

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோவிலில் மாசிமகத் திருநாளையொட்டி, 1,008 பால்குட பெருந்திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீமுத்து மாரியம்மன் சுக்ரவார வழிபாட்டுக் குழு அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இவ்விழாவை, அறக்கட்டளைக் கௌரவத் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் தொடக்கி வைத்தாா்.

கைலாசநாதா் கோயிலில் புறப்பட்ட பால்குட ஊா்வலம் 4 ராஜ வீதிகளில் வலம் வந்து, அம்மன் சன்னதியில் முடிவடைந்தது. இதையடுத்து, மாரியம்மனுக்குப் பாலாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், மாலையில் விடையாற்றி விழா நடைபெற்றது. இதில், விஷ்ணு துா்க்கை அம்மனுக்குச் சந்தனக்காப்பு அலங்காரம், உற்,வ அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெற்றன.

இவ்விழாவில் அறக்கட்டளைச் செயலா் எம். வேல்சாமி, பொருளாளா் துரைராஜன், துணைப் பொருளாளா் எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.