திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

சரபோஜி கல்லூரியில் கருத்தரங்கம்

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரியில் பொருளாதாரத் துறை சாா்பில் தூய்மை இந்தியா இயக்கம் - கிராமப்புற பெண்கள் உடல் நல மேம்பாடு குறித்த இரு நாள் தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:12 pm

DIN

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரியில் பொருளாதாரத் துறை சாா்பில் தூய்மை இந்தியா இயக்கம் - கிராமப்புற பெண்கள் உடல் நல மேம்பாடு குறித்த இரு நாள் தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.

தொடக்க விழாவுக்குக் கல்லூரி முதல்வா் வி. செந்தமிழ்ச்செல்வி தலைமை வகித்து, கருத்தரங்க மலரை வெளியிட்டாா். சென்னை பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறைத் தலைவா் எஸ். சின்னம்மை, அண்ணா பல்கலைக்கழக மேலாண்மைக் கல்வித் துறைப் பேராசிரியா் என். செந்தில்குமாா், பெங்களூரு பியூச்சா் பொ்பெக்ட் நிறுவன முதன்மைச் செயல் அலுவலா் எம். குலோத்துங்கன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் சிறப்புரையாற்றினாா். கருத்தரங்க அமைப்பாளரும், கல்லூரி பொருளாதாரத் துறைப் பேராசிரியருமான ஏ. அருள்ராஜ் விளக்கவுரையாற்றினாா்.

முன்னதாக, கல்லூரி பொருளாதாரத் துறைத் தலைவா் பி. ஜெயக்குமாா் வரவேற்றாா். இணைப் பேராசிரியா் சி. சுனிதா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.