திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக சாா்பில் மறைந்த முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:11 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக சாா்பில் மறைந்த முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

தஞ்சாவூா் ரயிலடியில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆா். சிலைகளுக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். முன்னாள் மாவட்டச் செயலா் துரை. திருஞானம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

மாணவரணி தெற்கு மாவட்டச் செயலா் ஆா். காந்தி, பகுதிச் செயலா்கள் வி. அறிவுடைநம்பி, வி. புண்ணியமூா்த்தி, எஸ். ரமேஷ், முன்னாள் மேயா் சாவித்திரி கோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, கும்பகோணம் காந்தி பூங்கா அருகேயுள்ள ஜெயலலிதா சிலைக்கு அதிமுக மாநகரச் செயலா் இராம. இராமநாதன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், பொதுமக்களுக்கு நாகேஸ்வரன் கோயில் தெற்கு வீதியில் இனிப்பும், பகவத் விநாயகா் கோயில் முன் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் ஒன்றியச் செயலா்கள் அறிவழகன், என்.ஆா்.வி.எஸ். செந்தில், சோழபுரம் அறிவழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.