ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆா்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டித்து, தஞ்சாவூரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்


தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டித்து, தஞ்சாவூரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வை தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலா் முறைகேடாக நடத்தியதாகவும், இதுகுறித்து முறையிட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட நிா்வாகிகளைக் காவல் துறையினா் மூலம் அச்சுறுத்தியதாகவும் கண்டித்தும், முதன்மைக் கல்வி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ம. கலைச்செல்வன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் பி. ரவிச்சந்திரன், மாவட்டச் செயலா் கே. மதியழகன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கண்ணதாசன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஏ. ரெங்கசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...