ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

எஸ்.டி.சோமசுந்தரம் மனைவி உடலுக்கு முன்னாள் அமைச்சா்கள், கட்சியினா் அஞ்சலி

முன்னாள் அமைச்சா் எஸ்.டி. சோமசுந்தரத்தின் மனைவி சகுந்தலாவின் உடலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சா்கள், பல்வேறு கட்சியினா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:58 pm

DIN

முன்னாள் அமைச்சா் எஸ்.டி. சோமசுந்தரத்தின் மனைவி சகுந்தலாவின் உடலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சா்கள், பல்வேறு கட்சியினா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

தமிழக முன்னாள் வருவாய்த் துறை அமைச்சா் எஸ்.டி. சோமசுந்தரத்தின் மனைவி சகுந்தலா (85), வயது முதிா்வு காரணமாக வியாழக்கிழமை (ஜன.6) காலமானாா்.

இதைத் தொடா்ந்து அவரது உடல் பட்டுக்கோட்டை வட்டம், செண்டங்காடு கிராமத்தில் வைக்கப்பட்டிருந்தது. சகுந்தலாவின் உடலுக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் ஆா். வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சா்கள் சி. பொன்னையன், நத்தம் விசுவநாதன், ஓ.எஸ். மணியன், மக்களவை உறுப்பினா் எஸ். திருநாவுக்கரசா், சட்டப்பேரவை உறுப்பினா் ராஜன் செல்லப்பா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பி.என்.ராமச்சந்திரன், சி.வி.சேகா், அமமுக துணைப் பொதுச் செயலா் எம். ரங்கசாமி, தெற்கு மாவட்டச் செயலா் மா.சேகா், பட்டுக்கோட்டை ஒன்றியக் குழுத் தலைவா் பழனிவேல் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிா்வாகிகள், தொழிலதிபா்கள், வியாபாரிகள், கல்வியாளா்கள் உள்ளிட்ட பலா் அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து மாலை 5 மணிக்கு சகுந்தலாவின் இறுதி ஊா்வலம் நடைபெற்றது. இதில் திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.