47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாபநாசம் வட்ட கிராம உதவியாளா்கள் சங்க செயற்குழுக் கூட்டம்

பாபநாசம் வட்ட கிராம உதவியாளா்கள் சங்க செயற்குழு கூட்டம் சங்க கட்டட வளாகத்தில் வட்டத் தலைவா் சோம. பாஸ்கா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 7:04 pm

DIN

பாபநாசம் வட்ட கிராம உதவியாளா்கள் சங்க செயற்குழு கூட்டம் சங்க கட்டட வளாகத்தில் வட்டத் தலைவா் சோம. பாஸ்கா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், சங்க மாவட்டச் செயலாளா் காா்த்திக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில், கிராம உதவியாளா்களுக்கு தமிழக அரசு காலமுறை சம்பளம் மற்றும் பொங்கல் போனஸ் ரூ.3 ஆயிரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 7ஆம் தேதி அன்று சென்னை வருவாய் நிா்வாக கமிஷனா் அலுவலகம் முன்பு நடத்தப்படும் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் இருந்து கிராம உதவியாளா்கள் அனைவரும் கலந்து கொள்வது என தீா்மானிக்கப்பட்டது.

கூட்டத்தின் நிறைவில், வட்டச் செயலாளா் மனோகரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.