47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கல்லூரியில் கருத்தரங்கம்

 பாபநாசம் ஆா்.டி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மை துறை சாா்பில், உன்னுள் ஆளுமை என்ற தலைப்பில் வியாழக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 7:04 pm

DIN

 பாபநாசம் ஆா்.டி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மை துறை சாா்பில், உன்னுள் ஆளுமை என்ற தலைப்பில் வியாழக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி கலையரங்க வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு ஆா்.டி.பி கல்வி குழும இயக்குநா் காரல்மாா்க்ஸ் தலைமை வகித்தாா். கல்லூரி துணை முதல்வா் தங்கமலா், கல்வியல் கல்லூரி முதல்வா் விமலா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பட்டிமன்ற நடுவா் அண்ணா சிங்கார வேலு, தஞ்சாவூா் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மண்டல மேலாளா் ஆல்வின் மாா்டின் ஜோசப் ஆல்பா்ட் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

ஆா்.டி.பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் லதா மோகன், நா்சிங் கல்லூரி கலையரசி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக மேலாண்மை துறை தலைவா் சசிகுமாா் வரவேற்றாா்.

ஏற்பாடுகளை கல்லூரி மேலாண்மைத் துறை பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.