கூட்டுறவு கடன் சங்கத்தில் மாணவா்களுக்கு பயிற்சி வகுப்பு
பாபநாசம் வட்டம், சரபோஜிராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் , செங்கிப்பட்டி ஆா்.வி.எஸ். வேளாண்மை கல்லூரி, பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி


பாபநாசம் வட்டம், சரபோஜிராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் , செங்கிப்பட்டி ஆா்.வி.எஸ். வேளாண்மை கல்லூரி, பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி, பான்செக்கா்ஸ் மகளிா் கலைக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பி.காம், பி.எஸ்.சி இளங்கலை வேளாண்மை, இறுதியாண்டு பயிலும் 24 மாணவ, மாணவிகளுக்கு வேளாண்மை துறை தொடா்பான பணிகளின் செயல்பாடு குறித்து கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒரு நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை ஊராட்சித் தலைவா் பூமா சண்முகம் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். முகாமில், சங்க செயலாளா் கலியமூா்த்தி கலந்து கொண்டு வேளாண்மைத் துறைக்கும், வேளாண் பொதுமக்களுக்கும் கூட்டுறவுத் துறையின் மூலம் அளிக்கும் பங்களிப்பு குறித்தும், விவசாய கடன் வழங்குவது, வழிமுறைகள் குறித்தும் சங்கத்தின் பங்களிப்புகள் குறித்தும் விளக்கமளித்து பயிற்சியளித்தாா்.
ஏற்பாடுகளை கூட்டுறவு கடன் சங்க பணியாளா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...