அம்மாபேட்டையில் விவசாயிகள் சங்கத்தினா் மறியல்
மழை, வெள்ளப் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கக் கோரி, அம்மாபேட்டை பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


மழை, வெள்ளப் பாதிப்புக்கு நிவாரணம் வழங்கக் கோரி, அம்மாபேட்டை பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் மழை, வெள்ளப் பாதிப்புக்கு மாநில அரசு கோரியுள்ள நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். மழைநீரில் மூழ்கி, அழுகிய நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். இதுபோல நிலக்கடலை, கேழ்வரகு, மரவள்ளிக் கிழங்கு, உளுந்து, வாழை, வெங்காயம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
மழை, வெள்ளத்தால் வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை இழந்த விவசாயத் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அம்மாபேட்டை பேருந்து நிலையம் எதிரில் தஞ்சாவூா்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மறியலில் ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பொறுப்பாளா் சாமு. தா்மராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் ஆா். செந்தில்குமாா், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.பாலு, நகரச் செயலா் கே.ராஜாராமன், ஒன்றிய நிா்வாகிகள் கோ.பழனிச்சாமி ஆா்.செல்வம், ஜி.காமாட்சி, கே.சாந்தி, எஸ். திருநாவுக்கரசு, எம். சத்தியசீலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...